"உள்ளம் உருகுதய்யா உன்னை உத்துப் பார்க்கயிலே"- சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாடல்
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது.
சென்னை,
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்". இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார்.
இப்படத்தின், முதல்பாடலான ‘வாடா தம்பி’ கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான நிலையில், நேற்று மாலை ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயிலே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது . இப்பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.
‘உள்ளம் உருகுதய்யா முருகா’ என்ற பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் இப்பாடலை வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் போன்றோர் பாடியுள்ளனர். நேற்று மாலை வெளியான இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Related Tags :
Next Story