'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வலிமை' திரைப்படத்திற்கு, தணிக்கைத்துறை யு/ஏ சான்று வழங்கியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் 178 நிமிடங்கள் நீளம் கொண்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.
Get ready for the most awaited action thriller of 2022, releasing on 13th Jan 2022.#Valimai censored U/A.#ValimaiPongal.#ValimaiTrailer : https://t.co/oDIbnspfVDpic.twitter.com/638jdOqke9
— Zee Studios (@ZeeStudios_) December 31, 2021
Related Tags :
Next Story