'ரைட்டர்' திரைப்பட இயக்குனரின் அடுத்த படத்தின் அறிவிப்பு..!


ரைட்டர் திரைப்பட இயக்குனரின் அடுத்த படத்தின் அறிவிப்பு..!
x
தினத்தந்தி 31 Dec 2021 10:00 PM IST (Updated: 31 Dec 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

'ரைட்டர்' திரைப்பட இயக்குனர் பிராங்ளின் ஜேக்கப் தன்னுடைய அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னை,

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'ரைட்டர்' திரைப்படத்தை இயக்கியவர் பிராங்ளின் ஜேக்கப். 'ரைட்டர்' திரைப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. 

தற்போது 'ரைட்டர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிராங்ளின் ஜேக்கப், லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, 'நீலம் புரொடக்சனின் 'ரைட்டர்' திரைப்படத்தைத் தொடர்ந்து திறமையான இயக்குனருடன் அடுத்த படத்தில் கையெழுத்திட்டதில் மிகுந்த சந்தோஷம்' என்று கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிராங்ளின் ஜேக்கப், 'இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி லலித் சார். உங்களது அன்பிற்கு நன்றி ரஞ்சித் சார்' என்று கூறியுள்ளார்.

Next Story