கீர்த்தி சுரேசுக்கு கை கொடுக்காத படங்கள்


கீர்த்தி சுரேசுக்கு கை கொடுக்காத படங்கள்
x
தினத்தந்தி 1 Feb 2022 2:45 PM IST (Updated: 1 Feb 2022 2:45 PM IST)
t-max-icont-min-icon

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று திரையுலகினர் கூறுகிறார்கள்.

மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையாக தயாராகி தமிழில் நடிகையர் திலகம் பெயரிலும், தெலுங்கில் மகாநடி பெயரிலும் வெளியான படத்தில் நடித்த பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் அந்தஸ்து கூடியது. ஆனால் தொடர்ந்து நடித்த கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. 

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி ஆகிய படங்கள் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் கொண்டவை. இந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று திரையுலகினர் கூறுகிறார்கள். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் பொன்னியின் செல்வன், தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்கராய் ஆகிய 2 பெரிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் இழந்ததாக கூறப்படுகிறது. 

பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். ஷியாம் சிங்கராய் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக சாய்பல்லவி நடித்துள்ளார். அடுத்து தமிழில் செல்வராகவனுடன் நடித்துள்ள சாணிகாகிதம், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா, சிரஞ்சீவியுடன் நடிக்கும் போலோ சங்கர் ஆகிய படங்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.


Next Story