போலியான எனது புகைப்படத்தை பார்த்தால் புகார் செய்யுங்கள் - மாளவிகா மோகனன்


போலியான எனது புகைப்படத்தை பார்த்தால் புகார் செய்யுங்கள் - மாளவிகா மோகனன்
x
தினத்தந்தி 3 Feb 2022 10:00 PM IST (Updated: 3 Feb 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

மாளவிகா மோகனன் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழில் ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது தனுசுடன் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவு சென்று நீச்சலுடையில் கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். 

இந்த நிலையில் மாளவிகா மோகனன் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை உண்மை என்று நம்பிய ரசிகர்கள் வலைத்தளத்தில் அவரை கடுமையாக கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். 

இது மாளவிகா மோகனனுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’சில மாதங்களுக்கு முன்பு எடுத்த எனது புகைப்படத்தை ஒருவர் ஆபாசமான முறையில் போட்டோ ஷாப் செய்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை நிறைய பேர் பகிர்ந்து வருகிறார்கள். உண்மை அறியாமல் இணைய தளங்களும் இதனை வெளியிடலாமா.  “போலியான எனது புகைப்படத்தை பார்த்தால் புகார் செய்யுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story