கார்த்திக் டைரக்டர் ஆகிறார்
நடிகர் கார்த்திக் ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டுள்ளார்.
பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், கார்த்திக். தொடர்ந்து அவர், `வாலிபமே வா', `நாடோடி தென்றல்', `பகவதிபுரம் ரெயில்வே கேட்', `கிழக்கு வாசல்', `உரிமை கீதம்', `ஊமை விழிகள்', `வருஷம் 16', `மவுனராகம்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கார்த்திக் ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டுள்ளார். ‘‘படத்தின் பெயர், நடிகர்-நடிகைகளின் பட்டியல் ஆகிய விவரங்களை விரைவில் அறிவிப்பேன்’’ என்கிறார், கார்த்திக்.
Related Tags :
Next Story