தன் உதவியாளரை நீச்சல் குளத்தில் தள்ளி விட்ட தனுஷ் பட நடிகை
தன் உதவியாளரை நீச்சல் குளத்தில் தள்ளி விட்ட தனுஷ் பட நடிகை சாரா அலிகானை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு ஆதங்கபடுகிறார்கள் ரசிகர்கள்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர், சாரா அலிகான். கடைசியாக ‘அத்ராங்கி ரே’ எனும் இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது.
சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் நடிகை சாரா அலிகான், சமீபத்தில் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், நீச்சல் குளம் அருகே சாரா அலிகான் தனது பெண் உதவியாளருடன் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அந்த உதவியாளரை நீச்சல் குளத்தில் அவர் தள்ளிவிடுகிறார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த உதவியாளர் மிரண்டு போகிறார்.
அதனைத்தொடர்ந்து சிரித்தபடியே அந்த உதவியாளரை கேலி செய்தபடி சாரா அலிகான் நீரில் நீந்தி விளையாடுகிறார். இது விளையாட்டுத்தனமான வீடியோ தான் என்றாலும் ரசிகர்கள் கடும் கண்டனக்குரல் விடுத்து வருகிறார்கள். ‘இப்படி செய்யலாமா?’, ‘என்ன கொடூரமான செயல் இது’ என்றும் விளாசுகிறார்கள். எல்லாவற்றையும்விட அந்த வீடியோவில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் சாரா அலிகானையும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு ஆதங்கபடுகிறார்கள்.
Related Tags :
Next Story