முதல் தடவையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி


முதல் தடவையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி
x
தினத்தந்தி 9 Feb 2022 3:46 PM IST (Updated: 9 Feb 2022 3:46 PM IST)
t-max-icont-min-icon

மெரினா படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து சினிமா துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது டான், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராக உள்ளன. அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். 

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கி உள்ளார். கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சாய்பல்லவிக்கு கதை பிடித்துள்ளதாகவும், எனவே இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Next Story