மாதவனின் “ராக்கெட்ரி” பட வெளியீடு ஒத்திவைப்பு..!!
நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட்ரி - நம்பி விளைவு. மாதவன் இயக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மேலும் நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகும் இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 1ம் தேதி படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 1 தேதி படத்தை வெளியிடுவதாக நடிகர் மாதவன் அறிவித்துள்ளார்.
@ActorMadhavan, @NambiNOfficial@vijaymoolan#Rocketrythefilm@27thinvestments@agscinemas@ufomoviez@yrf@pharsfilmpic.twitter.com/r6bbhq0wnT
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 14, 2022
Related Tags :
Next Story