உருவ கேலிக்கு மஞ்சிமா பதிலடி
உடல் எடை கூடியதை கேலி செய்பவர்களுக்கு மஞ்சிமா மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், துக்களக் தர்பார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுடன் எப்.ஐ.ஆர். படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தனது உடல் எடை கூடியதை கேலி செய்பவர்களுக்கு மஞ்சிமா மோகன் பதிலடி கொடுத்துள்ளார். உடல் எடை கூடியதை பலர் விமர்சிக்கும் நிலை உள்ளது. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று மஞ்சிமா மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மஞ்சிமா மோகன் கூறும்போது, “என்னை பொறுத்தவரை ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம். ஒல்லியாக இருந்தால் உடலில் கோளாறு இருக்கிறதா என்று கேட்பார்கள். குண்டாக இருந்தால் ஏன் அதிக குண்டாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
எனவே நாம் எப்படி இருந்தாலும் உடல் தோற்றத்தை பார்த்து விமர்சிக்கும் நிலைமை இருக்கத்தான் செய்யும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். நடிகை சாய்பல்லவி நம்பிக்கையோடு தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்’’ என்றார்.
Related Tags :
Next Story