வில்லன் நடிகரை பயப்பட வைத்த கதாநாயகி


வில்லன் நடிகரை பயப்பட வைத்த கதாநாயகி
x
தினத்தந்தி 18 Feb 2022 10:25 PM IST (Updated: 18 Feb 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீகாந்த்-சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்து, மணிபாரதி இயக்கியுள்ள படம், ‘தி பெட்.’ விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. கதாநாயகி சிருஷ்டி டாங்கே பேசும்போது கூறியதாவது:-

‘‘இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரியில் நடந்தது. கடும் குளிரில் நடுங்கியபடி நடித்தேன். குளிர் ஜுரமே வந்துவிட்டது. ஸ்ரீகாந்த் எனக்கு உதவினார். மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார்.

வில்லன் நடிகர் ஜான் விஜய் எல்லா நடிகர்-நடிகைகளையும் கேலியும், கிண்டலும் செய்வார். என்னிடம் மட்டும் வருவதில்லை. நான் திருப்பி அவரை கிண்டல் செய்வேன் என்பதால் என் பக்கம் வரமாட்டார். என்னை கண்டால் அவருக்கு பயம்.’’

இவ்வாறு சிருஷ்டி டாங்கே பேசினார்.

‘‘படத்தின் பெயரை சொன்னதும், இந்தப் படத்தில் நடிக்க வேண்டுமா? என்று தயங்கினேன். படத்தின் பெயரைப் போலவே கதையும் சர்ச்சையை கிளப்புமோ என்று பயந்தேன். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை கதையில் நடிகர்கள் யோசனை கூறுவதில் தவறு இல்லை. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது’’ என்று ஸ்ரீகாந்த் பேசினார்.

Next Story