கமல்ஹாசன் வழியில் அவரது ரசிகர் ஸ்ரீராம்


கமல்ஹாசன் வழியில் அவரது ரசிகர் ஸ்ரீராம்
x

குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமாகி புகழ்பெற்றது; சிறு வயதிலேயே தேசிய விருது வாங்கியது; முதல் மலையாளப் படத்திலேயே கதாநாயகன் அந்தஸ்தை பெற்றது.

இந்த பெருமைகளை பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன்தான். அவரது பரம ரசிகர் ஒருவரும் இதே பெருமைகளைப் பெற்றுள்ளார் என்று பலரும் பாராட்டுகிறார்கள். அவர் வேறு யாருமல்ல. ‘கோலி சோடா’ புகழ் ஸ்ரீராம்தான். இவரும் 2009-ம் ஆண்டில், ‘பசங்க’ படத்துக்காக தேசிய விருதை வென்றார்.

சமீபத்தில், ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘நவரசா’ படத்தில் இடம்பெறும் ரவுத்திரம் நாயகனாக முத்திரை பதித்தார்.

இவர் இப்போது ஒரு மலையாளப் படத்தில் நேரடி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை வேணுகோபால கிருஷ்ணன் தயாரிக்கிறார். சாகீன் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு பாலக்காட்டில் இரவு பகலாக நடக்கிறது.

Next Story