சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்: நடிகை நயன்தாரா சாமி தரிசனம் - ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு


சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்: நடிகை நயன்தாரா சாமி தரிசனம் - ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 3:15 AM IST (Updated: 19 Feb 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி மக திருவிழா நடந்தது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி மக திருவிழா நடந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்குள் செல்ல 700 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக நடிகை நயன்தாராவும் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் காதலர் விக்னேஷ் சிவன் இருந்தார். இருவரும் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். இதை அறிந்ததும் அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு காதலருடன் வந்தது பற்றி நிருபர்கள் கேட்டபோது, நடிகை நயன்தாரா பதில் அளிக்க மறுத்து, அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.

Next Story