நடிகை எஸ்தர் நோரன்ஹா ‘மீ டூ' புகார்


நடிகை எஸ்தர் நோரன்ஹா ‘மீ டூ புகார்
x
தினத்தந்தி 21 Feb 2022 2:13 PM IST (Updated: 21 Feb 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

நடிகை எஸ்தர் நோரன்ஹாவும் தெலுங்கு பட உலகில் பட வாய்ப்பு அளிக்க சமரசம் செய்து கொள்ளும்படி தன்னை அணுகியதாக மீ டூ புகார் தெரிவித்து உள்ளார்.

சினிமாவில, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகைகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீ டூவில் பகிர்ந்துள்ளனர். இந்தநிலையில் நடிகை எஸ்தர் நோரன்ஹாவும் தெலுங்கு பட உலகில் பட வாய்ப்பு அளிக்க சமரசம் செய்து கொள்ளும்படி தன்னை அணுகியதாக மீ டூ புகார் தெரிவித்து உள்ளார். இவர் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 2019-ல் பிரபல பாடகர் நோயல் சீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து அடுத்த வருடமே விவாகரத்து செய்து பிரிந்தார். 

எஸ்தர் நோரன்ஹா அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் நடிப்பில் இருக்கும் ஆர்வத்தினால்தான் சினிமா துறைக்கு வந்தேன். நடனமும் தெரியும். சிறப்பாக நடிக்கவும் தெரியும். அதன்பிறகு எதற்காக நான் பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. பட வாய்ப்புக்காக சுயமரியாதையை இழக்கவும், அழைப்புக்கு உடன்படவும் நான் தயாராக இல்லை. நான் சினிமாவை மட்டுமே நம்பி இல்லை. திறமை இருந்தால் மற்ற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்று ஆவேசமாக கூறினார்.


Next Story