முதல் இடம் பிடிக்க விரும்பாத சமந்தா
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
உங்கள் லட்சியம் என்ன? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “எனது லட்சியமாக கருதுவது என்னவென்றால் சமந்தா என்ற ஒருவர் இருந்தார் என்பதை எதிர்காலத்தில் அனைவரும் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான்’’ என்றார். சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க ஆர்வம் உள்ளதா? என்ற இன்னொரு ரசிகரின் கேள்விக்கு, “நடிகையாக நம்பர் 1 இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
முதல் இடத்தில் இருக்கும் நடிகை என்று சொல்வதை விட தொடர்ந்து நிறைய நல்ல படங்களில் நடித்து எனது நடிப்புத்திறனை வெளிப்படுத்துவதுதான் முக்கியம்’’ என்றார். எந்தமாதிரி படங்களை விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘எனக்கு நகைச்சுவை படங்களே பிடிக்கும்’ என்றார்.
மேலும் உடற்பயிற்சி சம்பந்தமான கேள்விக்கு சமந்தா பதில் அளிக்கும்போது, ‘ஜிம்முக்கு செல்வது உடல் நலனுக்கு முக்கியமானது., அதுபோல் தியானம் செய்வது மனநலனுக்கு முக்கியமானது’ என்றார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் சமந்தா நடித்து முடித்துள்ளார்.
Related Tags :
Next Story