'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா - பூஜா ஹெக்டே..?
'மாநாடு' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகசைதன்யா, பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் 'மாநாடு'. டைம் லூப் திரில்லர் கதையம்சம் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா மாநாடு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் தந்தை தன்னுடைய சுரேஷ் புரொடக்சன்ஸ் மூலம் மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் பிற மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு ரீமேக்கையும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் நாகசைதன்யா, சிம்பு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story