“வளரும் டைரக்டர்களுக்கு வரப்பிரசாதம், சசிகுமார்” - ஒரு புதிய இயக்குனரின் அனுபவம்
சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை, தங்கம் பா.சரவணன் டைரக்டு செய்கிறார். கிராமங்கள் சார்ந்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகராக அவர் உயர்ந்து இருக்கிறார். பல புதிய டைரக்டர் களுக்கு அவர் படிக்கட்டாக இருந்து வருகிறார். இதுபற்றி டைரக்டர் தங்கம் பா.சரவணன் கூறியதாவது:-
‘‘இது குடும்ப பாசமும், வர்த்தக அம்சங்களும் கலந்த கதை. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. என்னைப் போன்ற வளரும் டைரக்டர்களுக்கு வரப்பிரசாதம், சசிகுமார்.
அவரிடம் கதை சொன்னபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். சசிகுமாரின் திரையுலக வாழ்க்கையில், இது மிக முக்கியமான படமாக இருக்கும்.
சசிகுமாருடன் அனன்யா நாகல்லா, கருணாஸ், ஜி.எம்.சுந்தர், ஜோ மல்லூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Related Tags :
Next Story