கண்ணீர் விட்ட கதாநாயகன்


கண்ணீர் விட்ட கதாநாயகன்
x
தினத்தந்தி 25 Feb 2022 1:58 PM IST (Updated: 25 Feb 2022 1:58 PM IST)
t-max-icont-min-icon

‘எப்.ஐ.ஆர்.’ படம் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் விழாவில் விஷ்ணு விஷால் கண்ணீர் விட்டு அழுதார்.

விஷ்ணு விஷால் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘எப்.ஐ.ஆர்.’ படம் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதில் விஷ்ணு விஷால் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

‘‘ராட்சசன் படத்தை அடுத்து, ‘எப்.ஐ.ஆர்.’ எனக்கு வெற்றிப் படமாக அமைந்து இருக்கிறது. நான் நிறைய தோல்வி படங்கள் கொடுத்து இருக்கிறேன். அதனால் என்னை வைத்து பூஜை போடப்பட்ட 30 படங்கள் பூஜையோடு நின்று போனது.’’

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியபோது, கண்ணீர் விட்டு அழுதார்.

Next Story