ஆசியாவிலேயே முதல் முயற்சி
ஆசியாவிலேயே முதல்முறையாக, ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ திரைப்படம் தமிழில் உருவாகிறது.
‘பிகினிங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜெகன் விஜயா இயக்கத்தில், விஜயா முத்துசாமி தயாரிக்கிறார்.
வினோத் கிசன், கவுரி ஜி.கிசன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரோகிணி, லகுபரன், மகேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதுபற்றி டைரக்டர் ஜெகன் விஜயா கூறும்போது, “ஒரே நேரத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும். வலது பக்கம் மற்றொரு கதை நிகழும். பார்வையாளர்கள் குழப்பம் அடையாத அளவுக்கு ஒரே திரையில் இரு வேறு கதைகள் சொல்லப்படும். இது ஒரு புதுவகையான அனுபவமாக இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story