ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்...! தீவிர பந்துவீச்சு பயிற்சியில் அனுஷ்கா சர்மா...!
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்று பகிர்ந்துள்ளார்.
மும்பை,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இவர் இந்திய அணியை 2008ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டுவரை வழி நடத்தினார்.இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படத்திற்கு தயாராகும் விதமாக அனுஷ்கா சர்மா மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்று பகிர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story