பிரபாஸ் படத்துக்கு ரூ.100 கோடி அரங்கு


பிரபாஸ் படத்துக்கு ரூ.100 கோடி அரங்கு
x
தினத்தந்தி 25 Feb 2022 6:21 PM IST (Updated: 25 Feb 2022 6:21 PM IST)
t-max-icont-min-icon

பிரபாஸ் படத்துக்கு அரங்கை ரூ.100 கோடி செலவில் அமைத்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பிரபாஸ் மார்க்கெட் சமீப காலமாக உச்சத்துக்கு சென்றுள்ளது. தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மட்டுமே அறிமுகமாகி இருந்த இவரை, பாகுபலி படம் இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது. இதனால், அவர் நடிக்கும் படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். இதையடுத்து பிரபாஸ் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு படத்துக்கு ரூ.100 கோடி ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது. 

தற்போது ராதே ஷியாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய 3 படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்களும் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்தியா படமாக உருவாகிறது. ராதே ஷியாம் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். 

1970-ம் வருட காலகட்டத்தில் நடக்கும் கதையம்சத்தில் தயாராகிறது. இதற்காக அந்த காலத்து அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இந்த அரங்கை ரூ.100 கோடி செலவில் அமைத்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story