புற்றுநோய் பாதிப்பில் போராடும் நடிகை
புற்றுநோயுடனான என் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்று பிரபல நடிகை மருத்துவமனையில் இருந்து தெரிவித்துள்ளார்.
தமிழில் நான் ஈ, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹம்சா நந்தினி. தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார். ஹம்சா நந்தினி தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஹம்சா நந்தினி தற்போது ஆஸ்பத்திரியில் இருந்து தலையில் முடியில்லாத புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து புற்றுநோயில் இருந்து இன்னும் மீளவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புற்றுநோய்க்காக இதுவரை 16 முறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஆனாலும் முழுமையாக நோயில் இருந்து விடுபடவில்லை. இதனால் அடுத்த போராட்டத்துக்கு தயாராகிறேன். அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story