அவமானம், விவாகரத்து குறித்து சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு
தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து குறித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி வருகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். இருவரையும் சமரசப்படுத்தி மீண்டும் ஒன்று சேர்க்க நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.
தனது வலைத்தள பக்கத்தில் இருந்த நாக சைதன்யாவின் புகைப்படங்களையும் சமந்தா நீக்கி விட்டார். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட சுயசரிதையில் இருந்து சில வாசகங்களை எடுத்து தனது வலைத்தள பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். அதில் “30 வருடங்களாக மற்றவர்களைப்போல் நானும் தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து மற்றும் மரணத்தை எதிர்கொண்டு இருக்கிறேன். உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்தது. எனது பணம் பறிபோனது. எனது குடும்பம் சிதைந்து இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் எழுந்து வாழ்க்கையின் அடுத்த செங்கல்லை எடுத்து வைத்தேன். எது நடந்தாலும் சரி, உங்கள் முன்னால் இன்னொரு செங்கல் இருக்கிறது. நீங்கள் எழுந்து நடக்கப் போகிறீர்களா அல்லது அழுந்தி கிடக்க போகிறீர்களா என்பதுதான் உங்கள் முன் இருக்கும் கேள்வி’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story