20 வருடங்களுக்கு பிறகு பிரசன்னாவுடன் ஜோடியாக கனிகா


20 வருடங்களுக்கு பிறகு பிரசன்னாவுடன் ஜோடியாக கனிகா
x
தினத்தந்தி 27 Feb 2022 2:22 PM IST (Updated: 27 Feb 2022 2:22 PM IST)
t-max-icont-min-icon

பிரசன்னா ஜோடியாக கனிகா ஒரு புதிய ‘வெப்' தொடரில் நடிக்க இருக்கிறார். 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்க உள்ளனர்.

2002-ம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், பிரசன்னா. ‘கண்ட நாள் முதல்', ‘சீனாதானா001', ‘அஞ்சாதே' உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஷாலுடன் ‘துப்பறிவாளன்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரசன்னா ஒரு புதிய ‘வெப்' தொடரில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கனிகா நடிக்கிறார். ‘பைவ் ஸ்டார்' படத்தில் பிரசன்னாவுடன், கனிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள். இந்த ‘வெப்' தொடரை பாலாஜி மோகன் தயாரிக்கிறார்.

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரசன்னாவுடன் நடிப்பது குறித்து கனிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதனுடன், "பிரசன்னாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை ஒரு சக்கரம் தான் என்பதை உணர்கிறேன்", என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story