11-வது தடவையாக கர்ப்பமடைந்த அமெரிக்க பாடகி


11-வது தடவையாக கர்ப்பமடைந்த அமெரிக்க பாடகி
x
தினத்தந்தி 27 Feb 2022 2:34 PM IST (Updated: 27 Feb 2022 2:34 PM IST)
t-max-icont-min-icon

பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாடகி கேதரா ஷாவோன் கேகே வியாட். இவர், பல படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது ‘சோல் சிஸ்டா', ‘ஹூ நியூ' போன்ற ஆல்பங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. கேகே வியாட் தனது 18-வது வயதில் ரஹ்மத் மோர்டன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். பின்னர் 2009-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2010-ம் ஆண்டு மைக்கேல் ஜாமர் போர்டை 2-வது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தனர். அதன் பின்னர் 8-வது தடவையாக கர்ப்பமாக இருக்கும் போது, போர்டை விவாகரத்து செய்தார். 2018-ம் ஆண்டு தனது முன்னாள் காதலர் ஜக்காரியா டேரிங்கை மணந்தார். அவர் மூலமும் 2 குழந்தைகளை கேகே வியாட் பெற்றெடுத்தார்.

இந்தநிலையில் 11-வது முறையாக கேகே வியாட் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதனுடன் ‘எனது குடும்பத்தில் இன்னொருவர் புதிதாக இணைய உள்ளார். இதனால் எனது குடும்ப எண்ணிக்கை உயருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது', என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

39 வயதான கேகே வியாட் கர்ப்பமாக இருப்பதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் அதே வேளையில், ‘உங்கள் வீட்டிலேயே ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தலாம்', என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்.


Next Story