சுகப்பிரசவ உடற்பயிற்சி: காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோ


சுகப்பிரசவ உடற்பயிற்சி: காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோ
x
தினத்தந்தி 1 March 2022 1:13 PM IST (Updated: 1 March 2022 1:13 PM IST)
t-max-icont-min-icon

சுக பிரசவத்துக்காக என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து நடிகை காஜல் அகர்வால் விளக்கி உள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். 

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சுக பிரசவத்துக்காக என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் விளக்கி உள்ளார். 

அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’நான் வாழ்க்கையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். உடற்பயிற்சிகள் செய்தும் வருகிறேன். கர்ப்பம் என்பது வித்தியாசமான உணர்வு. கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் ஆரோக்கியமான முறையில் ஏரோபிக் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். பிரசவ காலத்துக்கு முன்பும் பின்பும் இந்த உடற்பயிற்சி ஆரோக்கியமாக இருக்க உதவும். இந்த உடற்பயிற்சி நமக்கு வலுவையும் கொடுக்கும்'' என்று கூறியுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




Next Story