இணைய தளத்தில் விஜய்யின் 'பீஸ்ட் ' படக்காட்சி கசிந்தது
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி.
சென்னை,
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், கிராபிக்ஸ், இசைகோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. நெல்சன் இயக்கி உள்ள இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் காட்சிகள் இணைய தளத்தில் கசிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டப்பிங் பணிகள் நடந்தபோது விஜய் வரும் காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து அந்த புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பீஸ்ட் படப்பிடிப்பு நடந்தபோதும் இதுபோல் யாரோ அதை புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டனர். அதன்பிறகு படப்பிடிப்பை சுற்றி பாதுகாவலர்களை நிறுத்தியும் படப்பிடிப்பு அரங்குக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தும் படப்பிடிப்பை நடத்தினர்.
இந்த நிலையில் டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து மீண்டும் படக்காட்சியை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்டு இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படக்காட்சிகளை வெளியிட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பீஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் யாரும் பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story