ரஷியாவில் “தி பேட்மேன்” படம் வெளியிடப்படாது- வார்னர் பிரதர்ஸ்
வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ ரஷ்யாவில் தி பேட்மேனின் வெளியீட்டை தற்போதைக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
நியூயார்க்,
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தி பேட்மேன்” அமெரிக்கா , ரஷியா உட்பட பல வெளிநாட்டுகளில் மார்ச் 4 [வெள்ளிக்கிழமை] வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனக்குரல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளும் ரஷிய நிறுவனங்களுக்கு தடை விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷியாவில் வார்னர் பிரதர்ஸ் தி பேட்மேனின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "உக்ரைனில் நெருக்கடியான நேரத்தை கருத்தில் கொண்டு, வார்னர் மீடியாவின் திரைப்படமான தி பேட்மேன் ரஷியாவில் தற்போதைக்கு வெளியிடப்படாது. இந்த சோகத்திற்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”. என தெரிவித்தார்.
இதேபோல் வால்ட் டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ் ரஷியாவில் தங்கள் படங்களின் வெளியீட்டை "தற்காலிகமாக நிறுத்துவதாக" தெரிவித்தனர்.
Related Tags :
Next Story