‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக ஆதி


‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக ஆதி
x
தினத்தந்தி 3 March 2022 2:13 PM IST (Updated: 3 March 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடிகர் ஆதியின் பயமுறுத்தும் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது..!

ஆர்யா, விஜய்சேதுபதி, அர்ஜூன், அருண் விஜய், கார்த்திக், அரவிந்தசாமி உள்ளிட்ட கதாநாயகர்கள் ஏற்கனவே வில்லன்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக வந்த ஆதி வில்லனாக நடிக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் ராம் பொதினேனி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் ஆதி, குரு என்ற முரட்டுத்தனமான தாதா வேடத்தில் நடிப்பதாகவும், வில்லன் வேடம் ஏற்க ஆதி ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கதையில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் வில்லனாக நடிக்க ஆதி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ஆதியின் வில்லன் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அந்த தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகிறது.


Next Story