கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியீடு
'விக்ரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் 'மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'விக்ரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது,அதன்படி 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி வருகிற மார்ச் 14ம் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story