பிரசாந்த் நடித்துள்ள 'அந்தகன்' படத்தின் அப்டேட்..!
நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை,
இந்தியில் வெளியான 'அந்ததுன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்த அவர் அதில் 'பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அந்தகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story