3-வது முறையாக இணைகிறார்கள் பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா


3-வது முறையாக இணைகிறார்கள் பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா
x
தினத்தந்தி 4 March 2022 11:40 AM IST (Updated: 4 March 2022 11:40 AM IST)
t-max-icont-min-icon

பாலா இயக்கும் படத்தில், சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கிறார்.

பாலா இயக்கத்தில், ‘நந்தா’ என்ற படத்தில் சூர்யா முதன்முதலாக நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்தில் விக்ரமுடன் சூர்யா இணைந்து நடித்தார்.

மூன்றாவது முறையாக இருவரும் இணைவதற்கு நல்ல கதைக்காக காத்திருந்தார்கள். இருவருக்கும் பிடித்த கதை இப்போது அமைந்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாலா இயக்கும் படத்தில், சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கிறார்.

அவர் இப்போது, ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருக் கிறார். பாலா இயக்கும் புதிய படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கும் என்று தெரிகிறது. இந்தப் படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.

Next Story