கப்பல் ஊழியர்களின் ‘பாரின் சரக்கு’
மூன்று பேரும் கப்பல் ஊழியர்களின் தயாரிப்பில் ‘பாரின் சரக்கு’.
‘‘சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் குறிப்பிடும் சரக்கு மதுபானம் அல்ல. அது என்ன என்பதை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறோம்...’’ என்கிறார், ‘பாரின் சரக்கு’ படத்தின் டைரக்டர் விக்னேஷ்வரன் கருப்புசாமி. இதில் கதாநாயகர்களாக சுந்தர், கோபிநாத் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இந்த மூன்று பேரும் கப்பல் ஊழியர்கள். கப்பலில் பணிபுரிந்த பணத்தை வைத்து படம் தயாரித்து இருக்கிறார்கள்.
‘‘குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இதுவரை திரையில் சொல்லப்படாத மர்மங்கள் நிறைந்த கதை. குஜராத், நாமக்கல், மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது’’ என்று கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story