வில்லி வேடத்தில் ‘கள்ளன்’ படத்தில், திகிலூட்டும் மாயா
‘கள்ளன்’ படத்தில், மாயா என்ற புதுமுகம் வில்லியாக கலக்கி இருக்கிறார்.
பிரபல எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் டைரக்டு செய்துள்ள படம், ‘கள்ளன்.’ இதில் இயக்குனர் கரு.பழனியப்பன் கதை நாயகனாக நடித்து இருக்கிறார். அவருடன் நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தரராஜா, நிகிதா, மாயா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இது, குற்றப்பின்னணியிலான திகில் படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி டைரக்டர் சந்திரா தங்கராஜ் சொல்கிறார்:-
‘‘வேட்டை சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஒரு தப்பு செய்து விடுகிறார். இத்துடன் அந்த தப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்.
ஆனால் அந்த தப்பு அவரை எப்படியெல்லாம் பாதிக்கிறது? என்பது படத்தின் கதை. தப்பு செய்த இளைஞராக கரு.பழனியப்பன் நடித்துள்ளார். இதற்கு முன் அவர் நடித்திருந்த சில படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை அவரிடம் பார்க்கலாம்.
பெரியகுளத்தைச் சேர்ந்த மாயா என்ற புதுமுகம் வில்லியாக கலக்கி இருக்கிறார். திகிலும், திருப்பங்களும் நிறைந்த கதாபாத்திரம், அது. படம் முழுவதும் கம்பம், தேனி பகுதிகளில் வளர்ந்துள்ளது.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம் விரைவில் திரைக்கு வரும்.’’
Related Tags :
Next Story