ஆர்.கண்ணன் இயக்கும் அறிவியல் கலந்த திகில் படத்தில் ஹன்சிகா மோத்வானி
ஆர்.கண்ணன் இயக்கும் அறிவியல் கலந்த திகில் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இவர் சமீபத்தில் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கி, தமிழில் அதே பெயரில் இயக்கி இருக்கிறார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
இப்போது சிவா, யோகிபாபு, பிரியா ஆனந்த் நடித்துள்ள ‘காசேதான் கடவுளடா’ படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதையடுத்து அவர் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இது அறிவியல், திகில் கலந்த கதை. ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் முடிவாகவில்லை. படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான அறிவியல் கூடம் ஒன்றை அமைத்து, அதில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. “இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்கிறார், டைரக்டர் ஆர்.கண்ணன்.
Related Tags :
Next Story