பாகுபலி 3-ம் பாகம் வருமா? நடிகர் பிரபாஸ் விளக்கம்


பாகுபலி 3-ம் பாகம் வருமா? நடிகர் பிரபாஸ் விளக்கம்
x
தினத்தந்தி 7 March 2022 2:05 PM IST (Updated: 7 March 2022 2:05 PM IST)
t-max-icont-min-icon

பாகுபலி 3-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு ' பாகுபலி 3-ம் பாகத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமவுலி கையில் உள்ளது' என்று பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

பாகுபலி முதல் மற்றும் 2-ம் பாகம் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் படங்கள் பன்மொழிகளில் வெளியாகின்றன. தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷியாம் படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிறது. சென்னை வந்த பிரபாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘’நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசுகிறார்கள். எனது படங்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது. சம்பளம் பற்றி பேசினால் வரி பிரச்சினை வரும். நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. எனக்கு பொருத்தமான பெண் அமைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். பாகுபலி 3-ம் பாகம் வருமா? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலியை என்னால் மறக்க முடியாது. பாகுபலி 3-ம் பாகத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமவுலி கையில் உள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நான் நடித்துள்ள ராதே ஷியாம் படத்தில் கைரேகை நிபுணராக வருகிறேன். காதல் கதையாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார்.


Next Story