“போரை நிறுத்துங்கள் புதின்” - கவிஞர் வைரமுத்து ட்வீட்
ஆயுதம் மனிதனின் நாகரிகம் என்றும் போர் அநாகரிகம் என்றும் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 14-வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படைகள் தீவிரமான பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் இருந்து இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் போரினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். போரை கைவிடுமாறு ரஷிய அதிபர் புதினுக்கு கவிதை வடிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“போரை நிறுத்துங்கள் புதின்
மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை வான் விழுங்கும்
பகலை இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின் மண்பானை உடையும்
ஆயுதம் மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்”
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
போரை நிறுத்துங்கள் புதின்
— வைரமுத்து (@Vairamuthu) March 9, 2022
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்
Related Tags :
Next Story