மகள்-தங்கையுடன் நடிகை ஷாலினி


மகள்-தங்கையுடன் நடிகை ஷாலினி
x
தினத்தந்தி 10 March 2022 2:56 PM IST (Updated: 10 March 2022 2:56 PM IST)
t-max-icont-min-icon

ஷாலினி தனது தங்கையும், நடிகையுமான ஷாமிலி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்த ஷாலினி அனியாத பிறவு என்ற மலையாள படம் மூலம் கதாநாயகியானார். இந்த படம் தமிழில் விஜய், ஷாலினி ஜோடியாக நடிக்க காதலுக்கு மரியாதை என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷாலினி, நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். 

அஜித், ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். அஜித்குமார் மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் ஷாலினி தனது தங்கையும், நடிகையுமான ஷாமிலி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. 

மூவருக்கும் அஜித் ரசிகர்கள் மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்து புகைப்படத்தை வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். ஷாமிலி விக்ரம் பிரபுவுடன் வீர சிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story