சர்ச்சையில் சமந்தா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
பேமிலிமேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு விளக்கம் அளித்த அவர் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அதில் நடிக்கவில்லை. எனது நடிப்பு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மதுபான விளம்பரத்தில் சமந்தா நடித்து இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. ரசிகர்கள் பலர் மது குடிக்க தூண்டுவதா? என்று சமந்தாவை கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.
Related Tags :
Next Story