அவதூறு வழக்கு: நடிகை கங்கனா மனு மீண்டும் தள்ளுபடி
அவதூறு வழக்கில் நடிகை கங்கனா மனுவையும் செசன்ஸ் கோர்ட்டு விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழில் தாம்தூம், தலைவி படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பேட்டியொன்றில் கங்கனா ரணாவத் தன்னை அவதூறாக பேசி இருப்பதாக பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் அவதூறு வழக்கில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், எனவே வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கங்கனா ரணாவத் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கங்கனாவின் மேல்முறையீட்டு மனுவையும் செசன்ஸ் கோர்ட்டு விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story