வங்கிக்கொள்ளையன் என்று பிளாக் பேந்தர் டைரக்டரை கைது செய்த போலீஸ்
வங்கிக்கொள்ளையன் என்று பிளாக் பேந்தர் டைரக்டரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து கையில் விலங்கு மாட்டி அழைத்து சென்றனர்.
பிரபல ஹாலிவுட் டைரக்டர் ரியான் கூக்லர். இவர் இயக்கிய ‘பிளாக் பாந்தர்’. ஹாலிவுட் படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது. புரூட்வலே ஸ்டேஷன், கிரீட் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.
ரியான் கூக்லர், அட்லாண்டாவில் உள்ள, அமெரிக்கன் வங்கிக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், முக கவசம் அணிந்தபடி சென்று 12 ஆயிரம் டாலர் பணம் எடுப்பதற்கான ஸ்லிப்பை பூர்த்தி செய்து பணத்தை வேறு இடத்தில் வைத்து எண்ணிக்கொடுங்கள். நான் எச்சரிக்கையாக இருக்கிறேன் என்று எழுதி கொடுத்தார்.
அவரது நடவடிக்கையில் காசாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு வங்கி கொள்ளையராக இருக்கலாம் என்று கருதி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ரியான் கூக்லரை துப்பாக்கி முனையில் கைது செய்து கையில் விலங்கு மாட்டி அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரது வங்கி கணக்கில்தான் பணம் எடுக்க வந்துள்ளதும், பிரபல டைரக்டர் என்பதும் தெரிய வர போலீசார் விடுவித்தனர். வங்கி நிர்வாகமும் ரியான் கூக்லரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
“இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது, வங்கி வருத்தம் தெரிவித்ததால் பிரச்சினையை விட்டுவிட்டேன்” என்று ரியான் கூக்லர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story