ராஷ்மிகாவின் முதல் இந்தி படம்


ராஷ்மிகாவின் முதல் இந்தி படம்
x
தினத்தந்தி 13 March 2022 9:25 PM IST (Updated: 13 March 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

ராஷ்மிகாவை, பாலிவுட் வாய்ப்பு தேடி வந்தது. அங்கு ‘மிஷன் மஜ்னு’, ‘குட்பை’ ஆகிய படங்களில் ஒப்பந்தமானார்.

கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா, 2016-ம் ஆண்டு தனது தாய்மொழியிலேயே ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக மூன்று கன்னட படங்களில் நடித்தவர், அடுத்ததாக 2018-ம் ஆண்டு ‘சலோ’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

அது முதல் தெலுங்கில் மிகவும் பிசியாக நடித்து வந்தவர், கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலமாக தமிழிலும் அறிமுகமானார். இந்த நிலையில் ராஷ்மிகாவை, பாலிவுட் வாய்ப்பு தேடி வந்தது. அங்கு ‘மிஷன் மஜ்னு’, ‘குட்பை’ ஆகிய படங்களில் ஒப்பந்தமானார்.

இதில் ‘மிஷன் மஜ்னு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் சித்தார்த் மல்கோத்ரா, கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்திய உளவுத்துறையில் பணியாற்றும் நாயகனின் சாகசங்கள் மற்றும் மர்மங்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று, படத் தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இதுவரை 15 படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, அங்குள்ள ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளார்.

அதே போல் பாலிவுட் ரசிகர்களையும் அவர் கொள்ளை கொள்வாரா, பாலிவுட்டில் அவரது சினிமா எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை, ஜூன் 10-ந் தேதிவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘மிஷன் மஜ்னு’ படத்திற்குப் பிறகு, அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘குட்பை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தந்தை-மகள் உறவுக்குள் நடக்கும் பாசப் பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

Next Story