மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்
மஞ்சிமா மோகனுக்கு கவுதம் கார்த்திக் அனுப்பியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்து செய்தி, இருவருக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்கு வலுசேர்த்துள்ளது.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு இதுவரை இருவரும் விளக்கம் சொல்லவில்லை, மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் பிறந்த நாளையொட்டி வலைத்தளத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து கவுதம் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உன்னைப்போன்ற ஒரு பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் மஞ்சிமா மோகனுடனான காதலை கவுதம் கார்த்திக் உறுதிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டு இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story