கையில் தனது பெயரை பச்சைக்குத்திய ரசிகருக்கு ‘மனைவி கிடைக்க’ சன்னி லியோன் வாழ்த்து..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 17 March 2022 4:05 PM IST (Updated: 17 March 2022 4:05 PM IST)
t-max-icont-min-icon

கையில் தனது பெயரை பச்சைக்குத்திய ரசிகருக்கு ‘மனைவி கிடைக்க’ சன்னி லியோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தி திரைப்படங்களில் தற்போது நடித்து வரும் சன்னி லியோன் முன்னதாக வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து அதன்பிறகு சினிமாவில் நடிகையானவர். தமிழில் 'வடகறி' திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'கரன்ஜித் கவுர்' - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன், அனாமிகா என்ற வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் சன்னி லியோன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தன்னுடைய அருகில் இருக்கும் ஒரு ரசிகரின் கையை கேமராவில் காட்டுகிறார். அவர் தன்னுடைய கையில் சன்னி லியோனின் பெயரை பச்சை குத்தியுள்ளார். அவரிடம் சன்னி லியோன், 'நன்றி இது மிகவும் அற்புதம்' என்று கூறினார்.

மேலும் அந்த வீடியோவை பகிரந்துள்ள சன்னி லியோன் அதில், 'நீங்கள் என்னை என்றென்றும் நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் இப்போது உங்களுக்கு வேறு வழியில்லை. மனைவியைக் கண்டடைவது அதிர்ஷ்டம்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



Next Story