சினிமாவில் நடித்துள்ளார்... முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் குலசாமி படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்


சினிமாவில் நடித்துள்ளார்... முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் குலசாமி படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்
x
தினத்தந்தி 17 March 2022 5:25 PM IST (Updated: 17 March 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஜாங்கிட் போலீஸ் அதிகாரியாக நடித்து சினிமாவில் நுழைந்துள்ளார்.

 நடிகர் விமல் நடித்துள்ள குலசாமி என்ற படத்தில் ஜாங்கிட் நடித்துள்ளார். இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். குலசாமி படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியானது. பெண்களுக்கு எதிராக கொடுங்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக போராடும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகர் கார்த்தி நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற தீரன் அதிகாரம்-1 என்ற படம், பவாரியா என்ற கொள்ளை கும்பலை ஜாங்கிட் கைது செய்து அடக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story