ஹீரோவை மாற்றும்படி மிரட்டல் ராஷ்மி கவுதம் மீது பட அதிபர் புகார்
தமிழில் சாந்தனு ஜோடியாக கண்டேன் படத்தில் நடித்தவர் ராஷ்மி கவுதம். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில், ராஷ்மி கவுதம் தன்னை மிரட்டியதாக தெலுங்கு தயாரிப்பாளர் நாகலிங்கம் புகார் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில்,
“நான் ராணி காரி பங்களா என்ற படத்தை தயாரித்தபோது ராஷ்மி கவுதம் ரவுடித் தனமாக நடந்து கொண்டார். சினிமா பாதி முடிந்த பிறகு ஒரு பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியும், படத்தின் ஹீரோவை மாற்றும்படி வற்புறுத்தியும் தகராறு செய்தார். பாதி படம் எடுத்துவிட்டேன். இனிமேல் ஹீரோவை மாற்றினால் நான் மிகவும் நஷ்டம் அடைவேன் என்று சொன்னாலும் கண்டுகொள்ளவே இல்லை. படப்பிடிப்புக்கு வராமலும் தொந்தரவு கொடுத்தார்.
இது சரியா என கேட்டபோது எனக்கு சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு தெரியும். மல்லேமால ஷியாம் பிரசாத் ரெட்டி தெரியும் என மிரட்டினார். எனக்கும்கூட சினிமா துறையில் நிறைய பேரை தெரியும், சூட்டிங்கை முடிக்காவிட்டால் சட்டப்படி உன் மீது வழக்கு தொடர்வேன் என நானும் மிரட்டியதால் இறங்கி வந்து படத்தை முடித்துக் கொடுத்தார்’’ என்றார். இது பட உலகில் பரபரப்பாகி உள்ளது
Related Tags :
Next Story