வெற்றிமாறனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றும் நடிகர் கருணாஸ்..!
நடிகர் கருணாஸ் இயக்குனர் வெற்றி மாறனுடன் இணைந்து உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார்.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடி வாசல்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் கருணாஸ் வாடி வாசல் திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார். இதுகுறித்து கூறிய நடிகர் கருணாஸ், 'கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறை தான்.
தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.
பல திரைப்படங்களில் இப்போது நான் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்த படத்தில் பணியாற்றுவது பெருமை. ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story