அஜித்துக்கு ஆதரவாக ஆர்.கே.சுரேஷ்
அஜித்துக்கு ஆதரவாக பட அதிபரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் பேசினார்.
அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அவரை பற்றியும், படத்தை பற்றியும் சிலர் கடுமையாக விமர்சித்தார்கள்.
இதுபற்றி ‘மாயன்’ படவிழாவில் பட அதிபரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் குறிப்பிட்டு பேசியதுடன் கண்டனமும் தெரிவித்தார்.
“அஜித் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. ஒரு தனி மனிதரின் நிறம், தோற்றம் பற்றி விமர்சிக்கக் கூடாது. இப்படி பேசுவதால், விமர்சிப்பவர்களின் கோபம் என் பக்கம் திரும்பி விடுமோ என்று பயப்பட மாட்டேன். எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. நானே நடித்து, நானே இயக்கி, நானே தயாரித்து, நானே ரிலீஸ் செய்வேன்.
500 படங்களுக்கு மேல் திரைக்கு வரமுடியாமல் தேங்கிக் கிடக்கின்றன. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களை தூக்கிப் பிடிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற சின்ன படங்களுக்கு நீங்கள்தான் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஆர்.கே.சுரேஷ் பேசினார்.
Related Tags :
Next Story