அர்ஜுன் நடிக்கும் திகில் படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’


அர்ஜுன் நடிக்கும் திகில் படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’
x
தினத்தந்தி 18 March 2022 12:44 PM IST (Updated: 18 March 2022 12:44 PM IST)
t-max-icont-min-icon

அர்ஜுன் ‘தீயவர் குலைகள் நடுங்க’ என்ற திகில் படத்தில் நடிக்கிறார்.

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ஒரு திகில் படம் தயாராகிறது. அந்தப் படத்தின் பெயர், ‘தீயவர் குலைகள் நடுங்க.’ இது, ஒரு கொலை வழக்கு விசாரணையின் பின்னணியில் நடக்கும் அழுத்தமான திகில் படம். துப்பறியும் பாணியில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தினேஷ் லட்சுமணன் டைரக்டு செய்ய, அருள்குமார் தயாரிக்கிறார்.

Next Story