குழந்தைகள் கடத்தல் பற்றிய படம் ‘அடுத்தது என்ன?’
விஜய், வனிதா விஜயகுமார் நடித்து வெளிவந்த ‘சந்திரலேகா’, ஜெயராமன்-வினிதா நடித்த ‘நிலா’ ஆகிய படங்களை இயக்கியவர், எம்.ஜி.ஆர்.நம்பி என்கிற நம்பிராஜ். இவர், சில வருட இடைவெளிக்குப்பின் எழுதி இயக்கும் படம், ‘அடுத்தது என்ன?.’ இந்தப் படத்தை பற்றி நம்பிராஜ் கூறியதாவது:-
“குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தும் கும்பலை பற்றிய படம், இது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். வங்கிக் கொள்ளை, போதை பொருட்கள், ஆள் கடத்தல் ஆகியவற்றுக்கு தீர்வு சொல்லும்.
இதில் புதுமுகங்கள் ரேகான், தேவதமி, கோமல், ஜாரா ஆகியோருடன் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் நடிக்கிறார். லண்டனில் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் 7 கிலோமீட்டர் நீளமுள்ள தொங்கு பாலத்தில், படத்தின் உச்சக்கட்ட காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசையமைக்கிறார். இந்திய திரையுலகில் ஒரு மைல் கல்லாகவும், பேசப்படக்கூடிய படமாகவும் ‘அடுத்தது என்ன?’ அமையும். படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.”
Related Tags :
Next Story